முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட அமெரிக்க இளையர்கள் 5 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறினர்.
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அந்த 5 பேரும் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
அவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப் பட்டவர்கள். சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அந்த 5 பேரையும் அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.