fontsize: 60% 70% 80% 90%

வெளிநாட்டு ஊழியரை மிரட்டிய பேருந்து பயணி

பேருந்து சேவை ஒன்றில் இந்திய ஆடவர் ஒருவர் உரக்க சத்தமிட்ட வீடியோ படம் யூடியுப் மற்றும் ஃபேஸ்புக் சமூக கட்டமைப்பு இணைய தளங்களில் உலா வருகிறது.
பின் கதவுகள் அருகில் அமர்ந்திருந்த அந்த இந்திய ஆடவர், தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பதை போல் காணப்பட்டார்.
தான் சிங்கப்பூரர் என்று சத்தமாக சொல்லி கொண்ட அவர், இந்தியாவில் இருந்து வந்தவர்களைப் பற்றி கோபமாக ஆங்கிலத்தில் பேசி கொண்டிருந்தார்.
இந்தியாவில் இருந்து குடியேறிவர்கள் இந்தியாவுக்கே திரும்ப வேண்டும் என்று கோபமாக பேசினார் அந்த ஆடவர்.
“நான் அமைச்சராக இருந்தால் இந்தியர்களை விரட்டி விடுவேன்,” என்று ஒரு கட்டத்தில் கத்தினார்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் பயணம் மேற்கொள்ளும் தருவாயில், அந்த இந்திய ஆடவர் பேருந்தின் முன் பகுதியில் இருந்த வெளிநாட்டு ஊழியர் போன்று தோற்றமளித்த ஒருவரை கண்டு அலறத் தொடங்கினார்.
அவரிடம் நடந்து சென்று தொடர்ந்து கத்திப் பேசினார். ஒரு சமயத்தில் பேருந்து ஔட்டுநரிடமும் கத்தினார் அந்த ஆடவர்.
வெளிநாட்டு ஊழியரிடம் தமிழில் கத்தி பேசியதோடு அவரை தள்ளினார் அந்த இந்திய ஆடவர். பேருந்திலிருந்து வெளியேறும் பின் கதவுகள் வரை வெளிநாட்டு ஊழியரை தள்ளினார்.
“காலில் விழுந்து கும்பிடு! எதிர்த்து பேசாதே!” என்றெல்லாம் அந்த வெளிநாட்டு ஊழியரை மிரட்டினார் அந்த இந்திய ஆடவர்.
அதன் பிறகு, வெளிநாட்டு ஊழியரை ஔடும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கட்டளையிட்டார் அவர்.
ஏறக்குறைய நான்கு நிமிடங்களுக்கு இந்த வீடியோ படம் நீடித்தது.
வீடியோ படத்தை கண்டு மன அமைதி பாதிக்கப்பட்டார் சுய தொழில் செய்யும் திரு அப்துல் சியாஹுதீன் (41). போலிசாரிடம் புகார் செய்யவும் தயாராக உள்ளார் என்றும் அவர் கூறினார்.
ஃபேஸ்புக் சமூக கட்டமைப்பு தளத்தில் வீடியோ படத்தை கண்ட திரு சியாஹுதீன், “நானும் சிங்கப்பூரர்தான். அந்த ஆடவர் எப்படி இவ்வளவு இழிவாகவும் தரம் குறைவாகவும் பேச முடியும்?” என்று கோபத்துடன் தமிழ் முரசிடம் கூறினார்.
வெவ்வேறு சூழ்நிலைகளில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு உதவும் வகையில் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் பேருந்து ஔட்டுநர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது என்று அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது.
“அவர்கள் தாங்களாகவே பிரச்சினையைத் தீர்க்க அல்லது கட்டுப்பாட்டு மையம் மூலம் பிரச்சினையை தீர்க்க அவர்கள் முனையலாம்,” என்றார் எஸ்எம்ஆர்டி நிறுவன பேச்சாளர் தமிழ் முரசிடம் கூறினார். இச்சம்பவம் குறித்து மேலும் தகவல் கிடைத்தால் விசாரணை செய்யலாம் என்றார் அவர்.
பேருந்து ஔட்டுநர் இச்சம்பவம் குறித்து பேருந்து மையத்தில் புகார் செய்தாரா என்று தெரியவில்லை.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838