fontsize: 60% 70% 80% 90%

நீதிக்கு புறம்பாக நடந்த முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

Bookmark and Share

போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்ற ஒருவரை அக்குற்றச் சாட்டில் இருந்து தப்ப வைக்க, தோழி ஒருவரை அக்குற்றத்தை ஏற்க வைத்ததை முன்னாள் போலிஸ் அதிகாரி ஒருவர் கீழ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
தற்போது சொத்து ஆலொசகராகப் பணிபுரியும் கெல்வின் சூ யூ பெங் (39), இவென்ஜலின் டே சூ ஆனை (21) போக்குவரத்துக் குற்றச்சாட்டில் இருந்து தப்ப வைக்க நீதிக்கு புறமாகச் செயல்பட்டார்..
சூ சென்ற 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டேயின் குற்றச்சாட்டை எற்க லியோங் மன் குவான் (34) என்ற மாதை ஏற்பாடு செய்தார்.
முன்னாள் துணை போலிஸ் சுப்ரின்டென்டனாக பணியாற்றிய சூ அதற்காக லியோங்கிற்கு $1,000 கொடுத்தார்.
இக்குற்றத்திற்காக லியோங் 3 மாத சிறைத் தண்டனை அனுபவித்தார்.
போக்குவரத்து சிவப்பு விளக்கில் நிற்காமல் சென்றதற்காகவும்; வாகனம் ஔட்டும் உரிமம் இல்லாமலும் வாகனக் காப்புறுதி இல்லாமலும் கார் ஔட்டிய குற்றத்திற்காகவும் டே சூ ஆனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் $1,900 அபராதமும் ஔர் ஆண்டு வாகனம் ஔட்டும் தடையும் விதிக்கப்பட்டது.
அவர் மீதுள்ள, நீதித்துறையின் செயல்பாட்டைத் திசைத் திருப்ப முயற்சி செய்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது.
சூ யூ பெங்கிற்கு இம்மாதம் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும்.
ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் அவர் எதிர்நோக்குகிறார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838