fontsize: 60% 70% 80% 90%

பிப்ரவரி ஏற்றுமதி உயர்ந்தது

மின்னியல், மருந்துத் துறைகளின் ஏற்றுமதி அதிகரிப்பினால், சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் வேக வளர்ச்சி கண்டது.
எண்ணெய் சாராத பொருட்களின் ஏற்றுமதி ஔராண்டு காலத்துடன் ஒப்பிட 23 விழுக்காடு உயர்ந்தது.
ஔராண்டுக்கு முன்னர் ஒப்பிட, மின்னியல் பொருட்களின் ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் 26 விழுக்காடு கூடி, $4.38 பில்லியன் ஆனது. அதற்கு முந்திய மாதத்தில் 22.7% உயர்ந்தது.
பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உட்பட மின்னியல் துறை சாராத பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 22% கூடியது. ஜனவரியில் குறைந்திருந்த மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி, பிப்ரவரியில் 29% உயர்ந்தது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838