முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
பதின்ம வயது மகளை மானபங்கம் செய்து, பாலியல் உறவு கொண்ட மாற்றன் தந்தை மீது நேற்று கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதுகாப்பு மேற்பார்வை யாளராக வேலை செய்து வந்த அந்த 41 வயது ஆடவர் 2007ம் ஆண்டு பதின்ம வயது பெண்ணை முதன்முதலில் மானபங்கம் செய்தார். அப்போது சிறுமிக்கு வயது 12.
அதற்கு பிறகு ஆடவர் சிறுமியை வடக்கு வட்டாரத்தில் உள்ள அவர்களது வ~ட்டில் மேலும் மூன்று முறை மானபங்கம் செய்தார் என்றும் நீதிமன்றம் அறிந்தது.
ஆடவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் பாலியல் உறவு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.