இந்து சமயத் தத்துவத்தின் அடிப்படையில், சுற்றுச் சூழலைக் காக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது பாஸ்கர் கலைக்கழகம் வழங்கும் ‘தாண்டவம்’.
தாண்டவம் என்பது ஆக்கமும் அழித்தலும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் விறுவிறுப்பும் வேகமும் கொண்ட நடனம்.
முத்துசுவாமி தீட்சிதரின் பஞ்ச பூத லிங்கக் கிருதிகளை உந்துசக்தியாகக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த பி.டி நரேந்திரன் நடனத்தை வடிவமைத்திருக்கிறார்.
ஐம்பெரும் பூதங்களின் இயல்புகளையும், அவை மனிதப் பண்புகளோடு பின்னிப் பிணைந்திருப்பதையும், இந்த முறையில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவையும் நாட்டியம் வழி சித்தரித்துள்ளார்,
பி.டி. நரேந்திரன்.
சிவபெருமானின் வேகமும் விறுவிறுப்பும் மிக்க தாண்டவத்தை உட்பொருளாகக் கொண்ட நடன வடிவமைப்பு, இயற்கையின் ஐம்பெரும் பூதங்களாகிய நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ ஆகியவை உயிரினங்கள் அனைத்திலும் கலந்து நிற்பதை விவரிக்கிறது.
பழமைப் பாதுகாப்புக்கும் புதுமை வளர்ச்சிக்கும் இடையே போராடும்
இன்றைய சமூகத்தில் இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை வளர்ப்பதன் அவசியத்தை நடனம் உணர்த்துகிறது.
இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நடனம் வலியுறுத்துகிறது.
பாஸ்கர் கலைக் கழகக் கலைஞர்களுடன் வளர்ந்து வரும் சிங்கப்பூர் நடன நட்சத்திரங்களும் பங்கேற்கும் ‘தாண்டவ’த்துக்கு பிரபல சிங்கப்பூர்
கலைஞர்கள் இசை வழங்குகின்றனர்.
‘தாண்டவம்’ நாட்டிய நிகழ்ச்சி
மார்ச் 20, 21 தேதிகளில்
இரவு 8.00 மணிக்கு பென்கூலன்
ஸ்திரீட், நாஃபா லீ பவுண்டேஷன் தியேட்டரில் அரங்கேறுகிறது.
கட்டணம்: $25, $30.
மேல்விவரங்களுக்கு அழைக்க வேண்டிய தொலைபேசி எண்கள்: 63366537, 63964523.
இணைய முகவரி: www.keppelnihts.com