fontsize: 60% 70% 80% 90%

பொன்சேகா விசாரணை ஒரே ரகசியம்

இலங்கையின் முன்னாள் ராணுவத் தலைவர் சரத் பொன்சேகா, ஒரு ராணுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
ராணுவச் சீருடையில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் அவர் ஆஜரானார்.
விசாரணை, இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முந்திய நாளான ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
என்றாலும் சரத் பொன்சேகா, ராணுவக் கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறும் குற்றச் சாட்டுகளின் பேரில் இன்று ராணுவ நீதிமன்றத்தில் ஆஜராவார்.
தனக்கு எதிரான குற்றச் சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் நடக்க இருக்கும் தேர்தலில் தான் போட்டிபோட முடியாதபடி தடுக்க முயற்சி நடக்கிறது என்றும் சொல்கிறார் ëஜனரல் பொன்சேகா.
ëஜனரல் பொன்சேகா, ஜனவரியில் நடந்த அதிபர் தேர்தலில் தோற்றார். சென்ற மாதம் கைதானார்.
ëஜனரல் கைதானதையும் அவருக்கு எதிரான விசாரணையையும் எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததுள்ளன.
இந்த ëஜனரல், இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரில் ராணுவத்துக்குப் பொறுப்பு வகித்தவர்.
போருக்குப் பிறகு அந்த வெற்றி யாருடைய சாதனை என்பதில் அதிபர் ராஜபக்சேவுக்கும் ëஜனரல் பொன்சேகாவுக்கும் இடையில் மோதல் மூண்டது.
ëஜனரல் பொன்சேகா, ராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டதாகவும் அதிபரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளை ëஜனரல் மறுக்கிறார். என்றாலும் ராணுவ நீதிமன்றம் இவற்றை விசாரிக்காது.
ராணுவ விசாரணை ரகசியமாக நடக்கிறது. செய்தியாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 10 மாதங்களுக்கு முன் கதாநாயகன் என்றும் வெற்றித் திருமகன் என்றும் போற்றிப் புகழப்பட்ட ëஜனரல், இப்போது கடும் பாதுகாப்புடன் கூடிய கடற்படைத் தலைமையகத்தில் சிறை வைக்கப்பட்டு இருக்கிறார்.
ராணுவ விசாரணை, ëஜனரல் சிறைவைக்கப்பட்டுள்ள கடற்படைத் தலைமையகத்தில் முற்றிலும் ரகசியமாக நடக்கிறது.
ëஜனரல் பொன்சேகாவைவிட குறைந்த பதவியில் இருக்கும் அதிகாரிகள் குழு அவரை விசாரிக்கிறது என்று பிபிசி தெரிவித்தது.
குற்றச்சாட்டுகள் என்னென்ன சொற்களைக் கொண்டுள்ளன என்பது கூட தெரியவில்லை.
என்றாலும் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்படுவர் என்றும் பொன்சேகா ஐந்து ஆண்டு சிறை வாசத்தை எதிர்நோக்க நேரிடக் கூடும் என்றும் வட்டாரங்கள் குறிப்பிடுகிறன்றன.
ëஜனரல் பொன்சேகா, தனக்கு எதிரான ராணுவ விசாரணையைத் தன் சொந்த வழக்கறிஞர்களை அமர்த்தி எதிர்வாதம் செய்யலாம்.
ëஜனரலைக் குற்றவாளி என்று ராணுவ மன்றம் முடிவு செய்தால், உயர் சிவில் நீதி மன்றத்திடம் அவர் மேல் முறையீடு செய்யலாம் என்று இலங்கை ராணுவப் பேச்சாளர் சொன்னதாகவும் பிபிசி கூறியது.
ëஜனரல் பொன்சேகாவை ராணுவ நீதிமன்றம் விசாரிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் சில்வா கருத்து தெரிவித்துள்ளார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838