fontsize: 60% 70% 80% 90%

சென்னைக்கு சில்க் ஏர்

சென்னைக்கும் பெங்களூருவுக்கும் செல்லும் விமான நிறுவனங்களின் பட்டியலில் வரும் ஜூன் மாதம் முதல் சில்க் ஏர் நிறுவனமும் சேரவுள்ளது.சென்னை, பெங்களூரு என்று இரு நகரங்களில் வலுவான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளதால் இந்த இடங்களுக்குச் சில்க் ஏர் விரைவில் சே£வையைத் தொடங்கும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சில்க் ஏர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.தமிழ்நாட்டின் தலைநகரமாகத் திகழும் சென்னைக்கு வாரத்தில் ஏழு நாட்களுக்கும் எதிர்வரும் ஜூன் 14ம் தேதி முதல் சில்க் ஏர் செல்லவிருக்கிறது.கர்நாட்டக்காவில் உள்ள பெங்களூருவுக்கு மே 17ம் தேதி முதல் சில்க் ஏர் தமது சேவைகளைத் துவங்கவுள்ளது.இந்நகரங்களின் பொருளியல் வளர்ச்சி வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் வரலாற்று மற்றும் கலாசார இடங்கள் சுற்றுலாத் துறைக்கும் பொழுதுபோக்குத் துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும் என்று சில்க் ஏர் தெரிவித்தது.சென்னை, பெங்களூரு இரண்டு நகர்களுக்கும் இப்போது சிங்கப்பூர் ஏரலைன்ஸ் நாள்தோறும் சேவைகளை நடத்துகிறது. புதிய சேவையைச் சேர்த்து இந்த இரண்டு நகர்களுக்கும் நாள்தோறும் தலா இரண்டு சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமும் நடத்தும்.“சென்னைக்கு அதிகமான விமான நிறுவனங்கள் செல்வது வாடிக்கை யாளர்களுக்கு நல்லதொரு செய்தி. உச்ச நேரங்களான பள்ளி விடுமுறை காலங்களில் பயணச் சீட்டுகள் தாராளமாகக் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று தமிழ் முரசிடம் கூறினார் திருவாட்டி வே. ëஜயபார்வதி (44).“மளிவு கட்டண விமானச் சேவைகளுடன் ஒப்பிடுகையில் சில்க் ஏர் நிறுவனத்தின் சேவையும் கட்டணமும் நியாயமாக இருக்கும்,” என்றார் சுய தொழில் நடத்தும் திருமதி எம். செல்வி{.கொச்சி, ஹைதிரபாத், திருவனந்தபுரம், கோயம்புத்தூர் ஆகிய இந்திய நகரங்களுக்கு இப்போது சில்க் ஏர் பறக்கிறது.
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838