fontsize: 60% 70% 80% 90%

வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை குறைந்தது

கடந்த ஆண்டில் அதிகமான வேலைகள் சிங்கப்பூரருக்குச் சென்றன. வெளிநாட்டினர் அமர்த்தப்படுவது குறைந்தது என மனித வள அமைச்சு வெளியிட்ட 2009ம் ஆண்டுக்கான தொழிலாளர் அறிக்கை குறிப்பிட்டது. 2009ல் வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டினர் எண்ணிக்கை 0.4% குறைந்து, 4,200 ஆனது. தயாரிப்புத் துறையில் ஆட்சேர்ப்பு குறைந்தது, வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகள் குறைந்ததற்கு ஒரு காரணம். இத்துறையில் 34,300 ஊழியர்கள் குறைந்தனர்.
கடந்த டிசம்பர் மாதக் கணக்குப்படி மொத்த ஊழியர்களில் 35.2% அல்லது 1,053,500 பேர் வெளிநாட்டினர். 2008 டிசம்பருடன் ஒப்பிட இது 0.6% குறைவு. பணிப்பெண்களைத் தவிர்த்து 2009 டிசம்பரில் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை 30.7% ஆக இருந்தது. 2008ல் இந்த அளவு 31.4% ஆக இருந்தது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838