fontsize: 60% 70% 80% 90%

திடீர் சோதனையில் 24 பேர் சிக்கினர்

Bookmark and Share

போலிசார் புதன்கிழமை நாடு முழுவதும் நடத்திய திடீர் சோதனையில் சட்டவிரோத கடன் கொடுக்கும் நடவடிக்கை களில் ஈடுபட்டதாகச் சந்தேகப்படும் 24 பேர் சிக்கினர்.
அவர்கள் 17 வயதுக்கும் 58 வயதுக்கும் உட்பட்டவர்கள். இதில் 21 பேர் ஆண்கள் 3 பேர் பெண்கள்.
கடன் முதலைகள் தங்கள் வங்கிக் கணக்கை சட்டவிரோத கடன் கொடுக்கும் நடவடிக்கையில் பயன்படுத்த சந்தேகப் பேர்வழிகள் அனுமதித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பிப்ரவரி மாதம் 11ம் தேதி திருத்தி அமைக்கப்பட்ட கடன் கொடுப்பவர் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனையை எதிர்நோக்குகின்றனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838