வெளிநாடுகளில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு குடியேறல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய இந்தியஅரசு முடிவு செய்துள்ளது.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த சட்டத் திருத்த மசோதா அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்த புதிய சட்டத்தின் பிரதான அம்சமாக குடியேறல் ஆணையம் ஒன்று உருவாக்கப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சர் வயலார் ரவி சொன்னார்.
வெளிநாடுகளுக்கு குடியேறுவோர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள், போக்குவரத்து மற்றும் செயல் பாடுகளை ஆணையம் கண்காணிக்கும்.
“வெளிநாடு வாழ் இந்தியர்களின் குடியேறல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படும்.
“வெளிநாடுகளில் இந்தியர்களை மோசடி செய்யும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரமும் இந்த ஆணையத்துக்கு வழங்கப்படும்.
“புதிய சட்டத்தின் படி, குறிப்பிட்ட வெளி நாடுகளில், இந்தியர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும். 18 நாடுகள் இதற்கென பட்டியலிடப் பட்டுள்ளன,” என்று அமைச்சர் கூறினார்.
வெளிநாட்டு வேலைக் காக பல்வேறு வழிமுறைகளில் செல்லும் இந்தியர்கள் இடைத் தரகர்களாலும், சில தவறான நிறுவனங் களாலும் அடிக்கடி ஏமாற்றப்பபடுகிறார்கள்.
இந்த விவகாரங் களுக்கு முற்றுப் புள்ளி வைத்து இந்தியர்களைக் காக்க வழிவகை செய்யும் நோக்கத்தில் புதிய சட்டம் இடம்பெறுகிறது.