fontsize: 60% 70% 80% 90%

ஆசிய வருகையை ஒத்திவைத்தார் ஒபாமா

வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணத்தை மார்ச் 18ம் தேதியிலிருந்து மார்ச் 21ம் தேதிக்கு வெள்ளை மாளிகை ஒத்திவைத்திருக்கிறது.
“தலைமகளும் அதிபரின் மகள்களும் பயணத்தில் இடம்பெறமாட்டார்கள்” என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.
பயணம் ஒத்திவைக்கப்பட்டாலும், இந்தோனீசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அதிபர் ஒபாமா செல்வார்.
சுகாதாரப் பராமரிப்பு மசோதாவின் வாக்கெடுப்பு அடுத்த வார பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் நடக்கும் என்ற நம்பிக்கையில் வெள்ளை மாளிகை அதிகாரிகள் பயணத்தை ஒத்திவைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் வாக்கெடுப்பு நடப்பது நிச்சயமல்ல.
சுகாதாரப் பராமரிப்பு மசோதா நிறைவேறத் தேவையான வாக்குகள் ஒபாமாவுக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இன்னும் கிடைக்கவில்லை என்பதை பயண ஒத்திவைப்பு சுட்டிக்காட்டுவதாக மற்ற சிலர் கருதுகின்றனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838