முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
ஆர்ச்சர்ட் ரோடு, கேலாங், செயிண்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷன் பகுதிகளின் பொதுக் கேளிக்கை இடங்களில் வெள்ளிக்கிழமை நடந்த 12 மணி நேர அதிரடி சோதனையில் 175 பேர் சிக்கினர்.
இவர்கள் குண்டர் கும்பல் நடவடிக்கைகள், சட்ட விரோத குடிநுழைவு, விபசார நடவடிக்கை, வரி செலுத்தாத சிகரெட்டு விற்பனை, அனுமதியின்றி வேலை பார்த்தல் போன்ற பலதரப்பட்ட குற்றச் சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 84 பேர் ஆண்கள், 91 பேர் பெண்கள்.
குற்றவியல் விசாரணைப் பிரிவு வழிநடத்திய இந்த அதிரடி சோதனையில் பல பாதுகாப்புத் துறை அமைப்புகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்நடவடிக்கையில் தீ பாதுகாப்பு மீறப்பட்ட குற்றங்களும் அறியப்பட்டன.