சிங்கப்பூர் குடிநுழைவு சோதனை ஆணையம் (ஐசிஏ) நேரடி பாஸ்போர்ட் சேவைகளை நேற்று மார்ச் 13 சனிக் கிழமை முதல் ஒரு வார காலத்துக்கு இடைக் காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், புதுப்பித்தல் போன்ற சேவைகளை ஐசிஏ அலுவலகத்தில் பெற முடியாது.
பாஸ் போர்ட்டுகளை ஐசிஏ அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அல்லது இணையம் வழி விண்ணப்பிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சிங்கப்பூரர்கள், www.ica.gov.sg என்ற இணையத் தளத்தில் பாஸ்போர்டு சேவைகளைப் பெறலாம்.
அளவுக்கு அதிகமானவர்கள் நேரடி சேவையை நாடியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குடிநுழைவு சுங்கத் துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
சென்ற வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் 3,600க்கும் அதிகமான வரிசை எண்கள் கொடுக்கப்பட்டன. வழக்கமான சராசரி 1,600 தினசரி அளவைவிட இது 125% அதிகம் என அறிக்கை குறிப்பிட்டது.