தமிழகத்தின புகழ்பெற்ற கவிஞர் பொன்னடியான், கவிதை குறித்த சொற்பொழிவு, கலந்துரையாடல்களில் பங்கேற்கிறார்.
இவர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய மாணவர். அவருடன் இறுதிநாள் வரை பணியாற்றியவர். 'குயில்' ஏட்டின் உதவி ஆசிரியர். 40 ஆண்டுகளாக சென்னை கடற்கரை மணலில் கவியரங்கம் நடத்தி வருபவர். ‘முல்லைச்சரம்’ எனும் கலை இலக்கிய ஏடு நடத்தி வருபவர்.
‘எழுச்சிக்கவிஞர்’ பட்டம், ‘பாவேந்தர்’, ‘கலைமாமணி’ விருதுகள் உட்பட பல விருதுகளைப் பெற்றவர். பல கவிதை, உரைநடை நூல்களைப் படைத்தவர்.
மார்ச் 27ம் சனிக்கிழமை ஜாலான் புசார் சமூக மன்றத்துடன் இணைந்து நடைபெறும் கடற்கரைச்சாலை கவிமாலையில் கவிஞர் பொன்னடியான் சொற்பொழிவாற்றுகிறார்.
மார்ச் 21ம் தேதி ஞாயிறு மாலை 5.00 மணிக்கு அங் மோ கியோ நூலகத்தின் கீழ்த்தளத்தில் பொன்னடியானுடன் இலக்கியக் கலந்துரையாடல் நடைபெறும். பங்கேற்க விரும்புவோர் தொடர் கொள்க: ஏ பி இராமன்-9028 0780.