பல பெண்களுடன் கள்ள உறவு கொள்ளவில்லை. ஒரே ஒரு பெண்ணுடன் மட்டுமே கள்ள உறவு இருந்தது என்று உள்ளூர் இயக்குநர் ஜாக் நியோ தி நியூ பேப்பர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பல உள்ளூர் வெற்றிப் படங்களை இயக்கியிருக்கும்
திரு நியோ (50) தமது கள்ளத் தொடர்பு விவகாரம் குறித்து வியாழக்கிழமை பொது மன்ன¬ப்புக் கேட்டார்.
விளம்பர அழகி வென்டி சோங்குடன் (22) மட்டுமே தமக்கு உறவு இருந்தது. தகவல் சாதனங்கள் குறிப்பிட்டது போல நடிகை-பாடகி ஃபோயிஸ் லீ சுவான், மாணவி மாலி மியூசெக் இருவருடனும் தமக்கு உறவு இருந்ததில்லை என்றார் அவர்.
“அவர்கள் எந்த நோக்கத்துடன் இப்படி ‘கதை திரித்தனர்’ என்று எனக்கு தெரியாது. நான் நொந்து போயிருக்கும் நேரத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து கல் எறியலாம் என நினைக்கிறார்களா,” எனக் கேட்டார் திரு நியோ.
இதற்கிடையே அரவான¬ திருவாட்டி மேகி லாய் (55), 22 ஆண்டுகளுக்கு முன்பு திரு நியோ பாலியல் நடவடிக்கையில் ஈடுபட தன்னை அழைத்ததாக, ஷின் மிங் சீன நாளிதழிடம் தெரிவித்திருப்பதைப் படித்து ஆத்திரம் அடைந்திருப்பதாக
திரு நியோ சொன்னார்.
1987ம் ஆண்டு உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருக்கும் குமாரி லாய் 1988ம் ஆண்டு உடல் பிடிப்பு ஊழியராக வேலை செய்து கொண்டிந்தார். அச்சமயம் திரு நியோவை சந்தித்ததாகவும், திரு நியோ உடல் பிடிப்பு நிலையத்தின் வாடிக்கையாளர் என்றும் திருவாட்டி லாய் கூறினார்.
அதேநேரத்தில் தமது வலைப்பூவில் தமது செயல் களுக்காக தமது குடும்பத்தினரிடமும் விசிறிகளிடமும் திரு ஜாக் நியோ மன்னிப்புக் கேட்டுள்ளார். தமது மனைவியின் அன்பே தம்மை மிகவும் பாதித்ததாகவும் அதுவே தமது வாழ்வில் கிடைத்தற் கரிய பொக்கிஷம் என்றும் திரு நியோ குறிப்பிட்டுள்ளார்.