உள்ளூர் நடிகை ஆன்ட்ரியா டி குரூஸ் (34) போக்குவரத்து போலிசார் நடத்திய திடீர் மது அருந்திய சோதனையில் சிக்கினார்.
அவர் பிறகு போக்குவரத்து போலிஸ் தலைமையகத்தில் நடந்த இரண்டாவது சோதனையில் தப்பித்தார்.
ஆனால் இந்த இரு சோதனைகளும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்றதாக தி நியூ பேப்பர் வெளியிட்ட செய்தி தெரிவித்தது.
போக்குவரத்து போலிசார் கிளமெண்சியூ அவென்யூவில் வியாழக்கிழமை அதிகாலை வேளையில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாகன ஔட்டுநர்களைப் பிடிக்க திடீர் சோதனை நடத்தினர்.
வாகன ஔட்டுநர்கள் 100 மில்லி லிட்டருக்கு 35 மைக்ரோ கிராம் அளவு மட்டுமே மது அருந்த சட்டம் அனுமதி அளித்திருக்கிறது.
2002ம் ஆண்டு கல்லீரல் மாற்று சிகிச்சை செய்த ஆன்ட்ரியா அன்று ஒரு கோப்பை பழச்சாறு (வையின்) மட்டுமே அருந்தியதாகக் கூறினார்..
கல்லீரல் நிராகரிப்பு மருந்தை இன்னமும் உட்கொள்ளும் ஆன்ட்ரியா மதுபானங்களை அளவோடு மட்டுமே அருந்த முடியும் என்று அவருடைய மருத்துவர் டாக்டர் கே சி டான் கூறினார்.