முதலாளிகளுக்கும் வெளி நாட்டுப் பணிப்பெண்களுக் கும் இடையிலான உறவை மேம்படுத்த இன்னும் அதிகம் செய்யலாம் என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் களின் கருத்தை மனிதவள அமைச்சு நேற்று ஏற்றது.
ஆகக்கடைசியாகச் செய்த கணக்கெடுப்பின்படி, சிங்கப் பூரில் கிட்டத்தட்ட 196,000 வெளிநாட்டுப் பணிப்பெண்கள் இருந்தனர்.
அதாவது, ஒவ்வொரு ஐந்து குடும்பங்களிலும் சுமார் ஒரு குடும்பத்தில் பணிப்பெண் இருக்கிறார். பணிப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் முதலாளிகள் பணிப் பெண்ணைப் பற்றி போதிய விவரம் அறிய வழிவகுக்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
“சிங்கப்பூரின் கலாசாரம், பழக்கவழக்கம், நிதி நிர்வாகம், உளைச்சல் சமாளிப்பு போன்றவை பற்றி கற்றுத்தரும் பயிற்சித் திட்டத்தை அறிமுகப் படுத்திட, வெளிநாட்டுப் பணிப்பெண் திறன் பயிற்சி சங்கத்தை மனிதவள அமைச்சு அமர்த்தும்,” என்று அமைச் சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு ஹவாசி டைப்பி தெரிவித்தார்.
சில சமூக மன்றங்களில் வார இறுதியில் நடத்தப்படவிருக்கும் இப்பயிற்சி மே மாதம் தொடங்கவிருக்கிறது.
ஊழியர்கள் அனைவருக்கும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரம் கற்றுத்தருவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் திரு ஹவாசி.
“துணைக் குத்தகையாளர் களை அமர்த்திய சில நிறுவனங்கள், வேலைகள் பாது காப்பாக மேற்கொள்ளப்படு வதை உறுதிப்படுத்தத் தவறி இருக்கின்றன” என்றார் அவர்.
“வேலைகளை வெளி தரப் பினரிடம் ஒப்படைத்தாலும், வேலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை வெளிதரப்பினரிடம் ஒப்படைக்கமுடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
“பொருத்தமான துணைக் குத்தகையாளர் அமர்த்தி, வேலை திறமையாகச் செய்யப் படுவதோடு மட்டுமன்றி பாது காப்பாகவும் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது, குத்தகை யாளரை அமர்த்திய மூல நிறுவனத்தின் பொறுப்பாகும்.
“எனவே, இவ்வாண்டு பிற் பகுதியில் வேலையிடப் பாது காப்பு, சுகாதாரச் சட்டத்தை நாங்கள் திருத்தவிருக்கிறோம். குத்தகையாளர்கள், துணைக் குத்தகையாளர்கள் ஆகியோ ரின் ஊழியர்களின் பாதுகாப் புக்கும் சுகாதாரத்திற்கும் மூல நிறுவனத்தைப் பொறுப்பேற்கச் செய்வது இதன் நோக்கம்,” என திரு ஹவாசி தெரிவித்தார்.
சென்ற ஆண்டு வேலை இடங்களில் நேர்ந்த மரணங் களில் 63 விழுக்காடு கட்டு மானத் துறையிலும் கடல் துறையிலும் நிகழ்ந்தன. ஆபத்துமிக்க இவ்விரு துறை களிலும் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண அமைச்சு தொடர்ந்து செயல்படும்.
உயரத்திலிருந்து செய்யும் வேலைகள், பாரந்தூக்கும் வேலைகள் ஆகியவற்றின் பாது காப்பை மேம்படுத்த சென்ற ஆண்டு இரண்டு பணிக் குழுக் களைத் தொழில்துறை அமைத்ததாக திரு ஹவாசி தெரிவித்தார்.
16 தொழில் துறைகளைச் சேர்ந்த சுமார் 1.4 மில்லியன் ஊழியர்கள் சட்டத்தின்கீழ் இடம்பெறுவார்கள்.