சிங்கப்பூரின் தேசிய பருவநிலை மாற்றச் செயலவை வலுவாக்கப்படவிருக்கிறது. செயலவை இனிமேல் பிரதமர் அலுவலகத்தின்கீழ் இயங்கும். நிரந்தரச் செயலாளர் செயலவைக்குத் தலைமை ஏற்பார் என்று மூத்த அமைச்சர் எஸ். ஜயகுமார் அறிவித்தார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளைக் கவனித்துவரும் பேராசிரியர் ஜயகுமார், பருவநிலை மாற்றத்திற்கான நிதியளிப்பு விவகாரங் களைக் கவனிக்கும் உயர்மட்ட ஆலோ சனைக் குழுவில் சேவையாற்ற சிங்கப் பூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இக்குழுவை ஐக்கிய நாட்டுத் தலைமைச் செயலாளர் அமைத்தார்.
சிங்கப்பூரின் சார்பில் நிதி அமைச்சர் தர்மன் சண்முகரத்னமும் இரண்டாவது நிதி அமைச்சர் திருமதி லிம் ஹுவீ ஹுவாவும் குழுவில் இடம்பெறுவர்.
சிங்கப்பூர் போன்ற சிறிய தீவு நாட்டுக்குப் பருவநிலை மாற்றம் முக்கிய மான விவகாரமாகும் என்றார் பேராசிரியர் ஜயகுமார். சென்ற 2007ம் ஆண்டு, பருவநிலை மாற்றம் குறித்த அனைத்து அமைச்சு குழுவைச் சிங்கப்பூர் அமைத்தது.
“நான் தலைமை தாங்கும் அனைத்து அமைச்சு குழுவுக்கு நிர்வாகக் குழு ஆதரவளிக்கிறது. சம்பந்தப்பட்ட அமைச்சு களின் நிரந்தரச் செயலாளர்கள் உள்ளடங்கும் நிர்வாகக் குழுவுக்கு, வெளியுறவு அமைச்சின் இரண்டாவது நிரந்தரச் செயலாளர் தலைமை ஏற்றுள்ளார்,” என்று பேராசிரியர் ஜயகுமார் தெரிவித்தார்.