fontsize: 60% 70% 80% 90%

குமாரி ஷெரின் ஜீவிதாவின் பரத நாட்டிய அரங்கேற்றம்

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தேசிய கல்விக் கழகத்தில் மாணவ ஆசிரியராகப் பயின்று கொண்டு இருக்கும் குமாரி ஷெரின் ஜீவிதா ஜோசஃப் (படம்) தமது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியை நாளை 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்த இருக்கிறார்.
தமது 13வது வயது முதல் திருமதி வசந்தா காசிநாத்திடம் பரதம் பயின்று வரும் குமாரி ஷெரின், இந்த அரங்கேற்றத் துக்கான பயிற்சியைக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே தொடங்கி விட்டார்.
அரங்கேற்றம் நாளை இரவு 7.00 மணிக்கு ராஃபிள்ஸ் ஹோட்டல், ஜுப்ளி அரங்கில் நடைபெறும்.
நடன ஆசிரியைத் திருமதி வசந்தா காசிநாத் அரங்கேற் றத்தின்போது நட்டுவாங்கத்தையும் கவனிப்பார்.
வாய்ப்பாட்டு: திருமதி பாக்யா மூர்த்தி, மிருதங்கம்: திரு எஸ் ரமணன், குழல்: திரு கானவிநோதன் ரத்னம், வீணை: சதானந்தன் அருண்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838