சான்டியாகோ
தென் அமெரிக்க நாடான சிலியில் சென்ற மாதம் 27-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இத்துடன் சுனாமியும் தாக்கியது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதன் பிறகும் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த நாட்டில் புதிய அதிபராக செபாஸ்டின் பினரா தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி ஏற்பு விழா பிரைசோ நகரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் பதவி ஏற்பு விழா மண்டபமும் குலுங்கியது. உள்ளே அவசர அவசரமாக பதவி ஏற்பு விழாவை முடித்து கொண்டு அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு விரைந்தனர்.
கடந்த 27-ந் தேதி பூகம்பத்துக்கு பிறகு மட்டும் இதுவரை 250 தடவை நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே மக்கள் பீதியில் உள்ளனர்.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் ஒன்றும் வரவில்லை.