நடிகையுடன் படுக்கையில் காட்சி தந்து தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நித்யானந்தா சாமியார் விவகாரம் இப்போது அரசியல் வேடம் பூணுகிறது.
சாமியாரைத் தேடி தமிழ்நாடு, கர்நாடகம் இரண்டு மாநிலங்களும் பெரும் வேட்டையைத் தொடங்கி இருப்பதாகத் தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன.
நடிகை ரஞ்சிதா- சாமியார் காம களியாட்ட வீடியோ வெளியாகி ஒரு வாரத்துக்கும் அதிக நாட்கள் ஓடிவிட்ட நிலையில் சாமியார் இருக்கும் இடம் இன்னமும் தெரியவில்லை.
சாமியார் நித்யானந்தா வட இந்தியாவில் இருப்பதாக அவருடைய ஆசிரம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அவர் சென்னையில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சாமியார் மலேசியா சென்று இருக்கக் கூடும் என்ற யூகமும் நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாமியார் மீது ஏமாற்றுதல், கற்பழிப்பு முயற்சி, பெண்களை மிரட்டியது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளன.
நித்யானந்தா மீது அவருடைய சீடர் லெனின் கருப்பன் கொடுத்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸ் ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
லெனின் கருப்பன் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் நடந்தது என்பதால் இந்த வழக்கு கர்நாடகப் போலிசுக்கு இப்போது மாற்றப்பட்டுவிட்டது என்று தமிழக போலிஸ் அறிவித்துள்ளது.
ஆனால் அப்படி எதுவும் இதுவரை தாக்கலாகவில்லை என்று கர்நாடக அரசாங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதற்கிடையே, சாமியார் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்து இருக்கிறார். தனக்கு எதிராக சதி நடக்கிறது என்றும் அதற்கான ஆதாரங்களை விரைவில் தான் வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சாமியார் நித்யானந்தாவின் பரம பக்தையாக இருந்து நடிகை ரஞ்சிதா அவருக்குப் பணிவிடை செய்வதைக் காட்டும் ஓர் ‘உடம்புபிடி வீடியோ’, சாமியார் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பத்து நிமிடங்கள் ஓடும் அந்தப் படத்தில் நடிகை சாமியாரின் கை, கால்கள், உடல் முழுவதும் எண்ணெயைத் தடவி ரஞ்சிதா பிடித்து விடுவதைக் காண முடிகிறது.
ஓர் அறையில் வந்து சாமியார் படுக்கையில் படுப்பது, படுத்தபடியே அவர் தொலைபேசியில் யாருடனோ பேசுவது படத்தில் தெரிந்தது.
ரஞ்சிதா உள்ளே வந்ததும் சாமியார் எழுந்து உடையைக் கழற்றியது, பிறகு ரஞ்சிதா அவருக்கு எண்ணெய்த் தேய்த்துவிடும் காட்சியையும் காணமுடிகிறது.
சாமியார் முதுகில் வலது விலா பக்கம் மச்சம் இருக்கிறது என்று வீடியோவில் வட்டம் போட்டுக் காட்டப்படுகிறது. ஆனால் அது கண்ணுக்குத் தெரியவில்லை.
படுக்கையைவிட்டு சாமியார் எழுந்ததும் ரஞ்சிதா ஒரு பையை எடுத்து தோளில் தொடங்கவிட்டபடி வெளியேறுவதைப் படத்தில் பார்க்க முடிகிறது.
சாமியார் நித்யானந்தா பல குற்றச்சாட்டுகளை நிராகரித்து இருக்கிறார் என்றாலும் நடிகை ரஞ்சிதா தொடர்பு பற்றி அவர் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சாமியார் நித்யானந்தா- ரஞ்சிதா வீடியோ விவகாரத்தை அடுத்து நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ள சிலரை உறவினர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அப்படி போலிசாரால் மீட்கப்பட்டுஅழைத்துச் செல்லப்பட்டவர்களில் திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப் பட்டைச் சேர்ந்த சுரேந்திரன் என்ற பையன் ஒருவர்.
இந்தப் பையனின் வயது தெரியவில்லை.
“சாமியாருக்கு சொத்துக்கள் அதிகளவு சேர்ந்ததும் அவற்றை அபகரிக்க ஒரு கும்பல் திட்டமிட்டது.
“அந்த கும்பலில் இடம் பெற்றுள்ள ஆறு பேரும் சாமியாருக்கு நெருக்க மானவர்கள்.
“அவர்கள் சாமியாரின் பெயரைக் கெடுத்துவிட்டனர். அவர்கள் கேட்ட பணத்தை சாமியார் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு அவபெயர் உருவாகி இருக்காது.
“இனி மீண்டும் நான் ஆசிரமத்திற்குச் செல்ல மாட்டேன்.
“நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்தது எனது பெற்றோருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்று அந்தப் பையன் கூறியதாகத் தமிழக தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன.