fontsize: 60% 70% 80% 90%

பாகிஸ்தான்: துப்பாக்கிக்காரர்கள் தாக்குதலில் 6 பேர் மரணம்

துப்பாக்கிகள், கையெறி குண்டுகளுடன் பாகிஸ்தானின் வட மேற்கு மாநிலத்தில் கிறிஸ்துவ தொண்டூழிய நிறுவனம் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமாபாத்துக்கு 200 கிலோமீட்டர் வடக்கே உள்ள மன்செரா என்ற கிராமத்தில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமியப் பேராளிகளே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை கொடூரமானது, புரிந்துகொள்ள முடியாதது என்று வர்ணித்த ‘வோர்ல்ட் விஷன்’ என்ற அந்தத் தொண்டூழிய நிறுவனம் உடனடியாக தனது சேவையை நிறுத்திக்கொண்டது.
நேற்று நடைபெற்ற தாக்குதலில் இரண்டு மாதர்கள் உட்பட 6 பாகிஸ்தானிய ஊழியர்கள் மரணமடைந்ததாக ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறுகிறது. இந்தத் தாக்குதலில் மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838