fontsize: 60% 70% 80% 90%

மயங்கிய நிலையில் யானை வயிற்றுக்குள் குட்டி யானை

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி மிருகக்காட்சி சாலையில் உள்ள யானை கர்ப்பமாக இருந்தது.
யானைக்கு பிரசவ வலி ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக அவதிப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வயிற்றுக்குள் எந்த அசைவும் தெரியவில்லை.
எனவே வயிற்றுக்குள்ளேயே குட்டி இறந்து விட்டதாக
2 நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் அறிவித்தனர்.
2 நாள் கழித்து யானை குட்டியை ஈன்றது.
அது இறந்து பிறந்திருக்க வேண்டும் என்றே கருதினார்கள்.
குட்டியை பரிசோதித்த போது அது உயிருடன் இருந்தது தெரிந்தது.
தாய் வயிற்றுக்குள்ளேயே அது மயங்கி கிடந்துள்ளது.
இதனால்தான் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது.
குட்டிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதன்பின் குட்டி மயக்கம் தெளிந்து எழுந்தது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838