fontsize: 60% 70% 80% 90%

காலங்கடந்து திருமணம் புரியும் மலேசியர்கள்

மலேசிய இளையர்கள், ஒன்று முன்னைவிட காலங்கடந்து திருமணம் புரிகின்றனர் அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே இருந்துவிடுகின்றனர்.
இதைத் தெரிவித்த மலேசியாவின் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் கடந்த 2000ம் ஆண்டிற்கும் 2007ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின் வழி இது தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வில் தென்படும் மாற்றங்களின் போக்குப்படி 2015ம் ஆண்டில் மலேசியர்கள் சராசரியாக 33 வயதில் திருமணம் புரிவர் என்று வாரியம் கூறுகிறது.
இந்த ஆய்வின்படி மலேசியாவில் ஆண், பெண் இருபாலாரும் 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் வயது முறையே 28.6 மற்றும் 25.1 என்றிருந்தது.
அத்துடன் 1970லிருந்து 2000ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருமணமாகா தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானதாக இந்த ஆய்வு கூறுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838