fontsize: 60% 70% 80% 90%

டொயோட்டா நிறுவனம் மீது பல பில்லியன் டாலர் இழப்பீடு வழக்கு

Bookmark and Share

டொயோட்டா கார்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் அமெரிக்காவில் பாதிக்கப் பட்ட கிட்டத்தட்ட 8 முதல் 10 மில்லியன் பேர் சார்பாக டொயோட்டா நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர சில அமெரிக்க வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
உலகெங்கிலும் விற்பனையான டொயோட்டா கார்களில் பல திடீரென அதிவேக மாகச் சென்தால் பல விபத்துகள் நிகழ்ந்து அமெரிக்காவில் பலர் உயரிழந்துள்னர்.
இவர்கள் ஒரு பக்கம் டொயோட்டா நிறுவனம் மீது வழக்குத் தொடர முடிவெடுத்திருக்கும் நிலையில், இயந்திரக் கோளாறு உள்ள இத்தகைய கார்களை வாங்கியதால் தங்கள் கார்களின் விலைமதிப்புக் குறைந்து விட்டதாகக் கூறி இந்தக் கார்களை வாங்கிய அனைவரின் சார்பாகவும் டொயோட்டா நிறுவனம் மீது வழக்குத் தொடர வழக்கறிஞர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.
இப்படி நடந்தால் பலர் குழுவாகச் சேர்ந்து இழப்பீடு கேட்டு நடத்தப்படும் மிகப் பெரிய வழக்காக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838