உலகில் முதல் பத்து பணக்காரர்கள் வரிசையில் இந்தியாவின் முக்கேஷ் அம்பானியும், சுனில் மிட்டலும் முறையே 4ம், 5ம் நிலையில் உள்ளனர்.
அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுதோறும் உலகின் பணக்காரர்களின் வரிசையை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, இந்த 2010ம் ஆண்டுக்„ன பணக்காரர்கள் வரிசையை வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான அம்பானி சகோதரர்களில் முக்கேஷ் அம்பானியும், எஃகு தொழிற்சாலைகளை வைத்திருக்கும் சுனில் மிட்டலும் முறையே 4ம், 5ம் இடத்தை வகிக்கின்றனர்.
இந்த சஞ்சிகை வெளியிட்டுள்ள பட்டியலின்படி, முக்கேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இடம் வகிப்பவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ஸ்லிம் என்பவர்.
இவருடைய சொத்து மதிப்பு 53.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு அடுத்த நிலையில்
53 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட சொத்து மதிப்பை வைத்திருப்பவர் மைக்ரோசாஃப்ட் நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ்.