மகளிர் மசோதா விவகாரத்தால் மக்களவையில் நான்காவது நாளாக நேற்றும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதை அடுத்து கருத்திணக்கம் மூலம் மசோதாவை நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்தது.
இதற்கிடையே அந்த மசோதா முழுமையாக நடைமுறைக்கு வர இன்னும் இரண்டரை ஆண்டுகள் எடுக்கும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி சொன்னார்.
நாடாளுமன்றம், சட்டசபை களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா டெல்லி மேல்சபை யில் செவ்வாய்க்கிழமை நிறை வேற்றப்பட்டது.
அம்மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். வருகிற 15 அல்லது 16-ந்தேதி மக்களவையில் மசோதா தாக்கலாகும் என்று தெரிகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்திருத்த மசோதா எல்லா மாநில சட்டசபைகளிலும் இந்தச் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்படும்.
அதன் பிறகே பெண்கள் மசோதா அமலுக்கு வரும். அதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகிவிடும் என்றார் அமைச்சர்.