ஜகார்த்தா
பாலித் தீவில் 2002ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாகத் தேடப்பட்டு வந்த முக்கிய போராளி ஒருவரை இந்தோனீசியப் போலிசார் சுட்டுக் கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
இஸ்லாமியப் போராளிகளுக்கு எதிராக இந்தோனீசியா நடத்திவரும் போராட்டத்தில் இவரது மரணம் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று போலிசாரும் ஆய்வாளர்களும் நேற்று கூறினர்.
பன்டன் மாவட்டத்தின் பமுலாங் வட்டாரத்தில் போலிசார் திடீர் சோதனைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் ஜமா இஸ்லாமியா போராளிகள் கும்பலைச் சேர்ந்த டல்மடின் என நம்பப்படுகிறது. இவருக்கும் “போலிசார் புலன் விசாரணை நடத்திவரும் பயங்கரவாதச் சம்பவங்களுக்கும்” தொடர் பிருப்பதாக நம்பப்படுவதாகத் தேசிய போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆனால், சடலத்தை உறுதியாக அடையாளம் காண ஔரிரு நாட்கள் ஆகக்கூடும் என்றும் போலிசார் கூறினர்.
இருந்தா லும், சுட்டுக் கொல்லப் பட்டவர் “டல்மடின் என்பதில் போலிசாருக்கு வலுவான சந்தேகம்” இருப்பதாகத் திடீர் சோதனை களில் சம்பந்தப்பட்டிருந்த ஒருவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.