முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
சோல்
வட கொரியா அதன் ஏவுகணைகளை இயக்குவதற் கென சுயேச்சை ராணுவப் பிரிவை அமைத்திருக்கிறது.
இடைத்தொலைவு ஏவுகணைகளைத் தொடர்ந்து உருவாக்குவதில் வடகொரியா உறுதியாக இருக்கிறது என்பதை இது குறிப்பதாகத் தென் கொரியா கருத்துரைத் ததாக யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இத்தகைய ஏவுகணைகள் 3,000 கிலொமீட்டருக்கும் அதிக தொலைவு பாய்ச்சப்படலாம். ஜப்பானிலும் குவாமிலும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைத் தாக்கக்கூடிய ஆற்றல் இந்த ஏவுகணைகளுக்கு உண்டு.
ஏவுகணை திட்டத்தை நிறுத்துமாறு உத்தரவிட்ட ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத் தீர்மானத்தை வட கொரியா எதிர்த்து வருகிறது.
- ஏஎப்பி