ஹாங்காங்
ஹாங்காங்கில், ஒரே வட்டாரத்தில், ஆறு மாதங்களில் நான்காவது முறையாக, அமிலம் நிரப்பப்பட்ட பீர் போத்தல் தெருவில் வீசப்பட்டதாகப் போலிசார் நேற்று தெரிவித்தனர். இத்தாக்குதல்கள் அனைத்துக்கும் ஒருவரே பொறுப்பாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
சென்ற 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், ஹாங்காங்கில் நடந்திருக்கும் 12வது தாக்குதல் இது. இவற்றில் எட்டு தாக்குதல்கள் நகர்ப்பகுதிகளிலும், மூன்று தாக்குதல்கள் புதிய வட்டாரங்களிலும் நடந்தன. தாக்குதல்களில் இதுவரை 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த தாக்குதலில், குறைந்தது ஔர் ஆண் பாதசாரி காயமடைந்தார்.
ஷாம் ஷுய் போ வட்டாரத்திலிருந்த கட்டடம் ஒன்றிலிருந்து, அமிலம் நிரப்பப்பட்ட “Blue Girl” பீர் போத்தல் அப்லியூ தெருவில் வீசப்பட்டது.
அந்த போத்தல் ஒரு கடையின் கூரை மீது விழுந்தது. போத்தலிலிருந்து சிதறிய அமிலம், அவ்வழியே சென்ற ஆடவரின் முகத்தில் தெறித்து அவரைக் காயப்படுத்தியது.