fontsize: 60% 70% 80% 90%

மைய நிலப்பகுதிகளில் உள்ள அரசாங்கப் பிரிவுகள் இடமாற்றம்

நகர்ப்பகுதிக்குள் அமைந்திருக்கும் அரசாங்கப் பிரிவுகள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் மா போ டான் தெரிவித்தார்.
மையப் பகுதிகளிலுள்ள அலுவலக இடங்களைத் தனியார் துறையின் தேவைகளுக்காக ஒதுக்குவது இதன் நோக்கம் என்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
தேசிய வளர்ச்சி அமைச்சு, அதன் வாரியங்களான வேளாண்-உணவு கால்நடை வாரியம், கட்டட கட்டுமான வாரியம் ஆகியவை 2015ம் ஆண்டுக்குள் ஜூரோங் கேட்வே பகுதிக்கு இடம் மாற்றப்படும் என திரு மா தெரிவித்தார்.
சுற்றுப்புற, நீர்வள அமைச்சு, அதன் வாரியங்களான பொதுப் பயனீட்டுக் கழகம், தேசிய சுற்றுச்சூழல் வாரியம் ஆகியவையும் அதற்குள் ஜூரோங் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டிருக்கும்.
சிங்கப்பூர் ஊழியர் மேம்பாட்டு வாரியம் பாய லேபார் சென்ட்ரலுக்கு இடம் மாற்றப்படுகிறது. அதன் தொடர் கல்வி, பயிற்சி வளாகம் 2013ம் ஆண்டு கடைசிக்குள் அங்கு கட்டி முடிக்கப்படும்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838