fontsize: 60% 70% 80% 90%

கட்டுமானத்துறைக்கு $250 மில்லியன்

Bookmark and Share

கட்டுமானத் துறை புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்தி, செயலாற்றலை மேம்படுத்திட $250 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகிறது.
மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிலாளர்களின் திறன் மதிப்பீடு ஆகியவற்றுக்கும், மேலும் பல பட்டத் தொழிலர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் ஆகியோரை இத்துறைக்கு ஈர்க்கும் நோக்கத்துடன் உபகாரச் சம்பளம் வழங்குவதற்கும் இந்த நிதி செலவிடப்படும்.
புதிய தொழில்நுட்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்த நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும். உதாரணமாக, பூமிக்கடியில் கம்பிவடங்கள் போடுவதற்குத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்திட, கம்பிவடம் இழுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.
இணை நிதி பங்களிப்பு அடிப்படையிலேயே இந்த நிதி முழுவதும் விநியோகிக்கப்படும் என்று கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித்தது.
கட்டுமானத் தொழில்துறையின் உற்பத்தித்திறன் 1995ம் ஆண்டுக்கும் 1999ம் ஆண்டுக்கும் இடையில் -2.1 விழுக்காட்டி லிருந்து -4.1 விழுக்காட்டுக்குக் குறைந்ததாகத் தேசிய வளர்ச்சிக்கான மூத்த துணை அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளு மன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில், கட்டுமானத் தொழில்துறையின் உற்பத்தித்திறன் 0.7% விகிதத்தில் வளர்ச்சி அடைந்தது. ஆனால், இது ஆஸ்திரேலியாவின் உற்பத்தித்திறனில் பாதிதான் என்று தெரிவிக்கப்பட்டது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838