fontsize: 60% 70% 80% 90%

போலி கல்வி நிலையம் நடத்திய போலிஸ் அதிகாரி

உதவி போலிஸ் சூப்பரின்டன்ட் ஒங் டட் வெய், சீனாவைச் சேர்ந்த தனது காதலி யாவ் ஹொங்சிங்குடன் (37) சேர்ந்து 2004ம் ஆண்டு “S&T எடுகேஷனல் சர்வீசஸ்” எனும் கல்வி நிலையத்தை அமைத்தார்.
நிறுவனத்தில் தனக்கிருந்த ஈடுபாட்டை மறைத்திட, நிறுவனத்தின் இயக்குநராக 36 வயது ஒங் தனது பெயரைப் பதிவு செய்யவில்லை. ஆனால், தொழிலை நடத்தியது அவர்தான் என்று மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவரது நிறுவனம் எந்தவிதக் கல்வி வகுப்புகளும் நடத்தவில்லை. பதிலாக, சீனா நாட்டவர்கள் சமூக வருகை அனுமதி, மாணவர் அனுமதி அட்டை, வேலை அனுமதி அட்டை போன்ற வற்றிற்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தது. இச்சேவைகளுக்கு $800 முதல் $6,000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
போலி கல்வி நிலையத்தில் வருமானம் அதிகம் கிடைக்காததால் யாவ் ஹொங்சிங் 2005ம் ஆண்டு மே மாதம் “மசாஜ்” நிலையம் திறந்தார்.
யாவ் உரிமம் பெற இயலாது என்பதால், லிம் என்பவரை உரிமம் எடுக்கச் சொல்லி, அதற்காக மாதத்திற்கு அவருக்கு $300 கொடுத்தார் ஒங்.
சென்ற வெள்ளிக்கிழமை, ஒங்கின் குற்றத்திற்கு 10 மாதம், 3 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லிம்முக்கு எட்டு மாதம், 2 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, லஞ்சமாகப் பெற்ற $1,940 தொகையை அபராதமாகக் கட்டும்படியும் லிம்முக்கு உத்தரவிடப் பட்டது. ஒங்கின் காதலி யாவுக்குச் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் $21,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838