மலேசியாவில் ரோமன் கத்தோலிக்கர்கள் போல வேடமிட்டு தேவாலயத்துக்கு சென்று புனித அப்பம் பெற்று கொண்ட செய்தியாளர்களின் அல் இஸ்லாம் சஞ்சிகை மன்னிப்பு கோரியுள்ளது.
அதேபோல் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட செய்தியாளர்களும் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
முன்னதாக, அல் இஸ்லாம் சஞ்சிகை பொது மன்னிப்புக் கோரினால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று தேவாலயத்தின் ஆர்ச்பிஷப் டான் { மெர்பி பாக்கியம் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம்கள் முறைகேடாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறார்களா என்பது குறித்து ஆராயச் சென்ற செய்தியாளர்கள், புனித அப்பத்தை வாங்கி அதை வாயில் இருந்து துப்பியதாக வெளியிடப்பட்ட செய்தி கிறிஸ்துவர்களின் மனதை புண்படுத்துவதற்காக அல்ல என அல் இஸ்லாம் என்ற அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியாளர்கள் மீதான விசாரணை கைவிடப் பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் புகார் செய்ய ஆரம்பித்தனர்.
கிறிஸ்துவர்கள் சாப்பிடும் புனித அப்பத்தின் முக்கியத் துவத்தை அந்த செய்தி யாளர்கள் அறிந்திருக்கவில்லை.
அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் வழி வகுக்காது என மலேசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அப்துல் கனி பட்டேல் கூறினார்.
பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கும் மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யாக உள்ளனர்.
கடந்த சில மாத காலமாக இங்கு மதம் தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன.