முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் சனிக்கிழமை ஆலங்கட்டி மழையுடன் கூடிய சிறிய அளவிலான சூறாவளிப் புயல் அடித்தது.
இதைத் தொடர்ந்து அங்கு முழு அளவிலான சூறாவளிப் புயலுடன் கூடிய மழை, வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் தங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
சனிக்கிழமை பெய்த சூறாவளிப் புயலுடன் கூடிய மழையில் விக்டோரியா மாநிலத்தில் ஏறக்குறைய 100,000 வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஏஎப்பி செய்தித் தகவல் கூறுகிறது.
கனத்த மழை பெய்த மெல்பர்ன் நகரில் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெல்பர்ன் நகர் தவிர்த்த விக்டோரியா மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மழைநீர் சுமார் 70 மில்லிமீட்டர் அளவு இருந்ததாகக் கூறப்படுகிறது.