ஈராக் போர் தொடர்பான விசாரணையில் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் சாட்சியம் அளித்தார்.
இது தற்பொழுது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அவர் சூறாவளி வேகத்தில் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டுப் படையினரைக் காணச் சென்றுள்ளார்.
தென் ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினரை சந்தித்த அவர், மிக விரைவில் சாலையோர குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் ரோந்து வாகனங்கள் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, பிரிட்டனில், போருக்கான ஆயுதங்கள் தொடர்பான எந்த ஒரு கோரிக்கையையும் நிதியமைச்சர் என்ற முறையில் தான் நிராகரிக்கவில்லை என்று விசாரணையில் கார்டன் பிரவுன் சாட்சியம் அளித்திருந்தார்.
ஆனால் இது பற்றி இரண்டு முன்னாள் பிரிட்டிஷ் ராணுவத் தளபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தப் பிரச்சினை மிகவும் சரச்சைகுரியதாகும்.
அதற்குக் காரணம் பொருத்தமான ஆயுதங்கள் இல்லாததாலேயே ஆப்கானிஸ்தானில் பல பிரிட்டிஷ் படையினர் பலியானதாக அவர்களது குடும்பத்தார் சொல்லி வருகின்றனர்.