விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் இலங்கை ராணுவம் நினைவுச் சின்னம் எழுப்புகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நந்திக்கடல் பகுதியில் கொல்லப்பட்டார்.
அந்த இடத்தில் பாதுகாப்புப் படையினர் நினைவுச் சின்னம் அமைத்து வருவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.
மேலும் போர் கடுமையாக நடைபெற்ற புதுக்குடியிருப்பு, விஸ்வமடு, புதுமாத்தளம் பகுதியில் கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதிக்குள் பொதுமக்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை என்றும் அச்செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையின் பிரபாகரனின் தாயார் இலங்கையில் இருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.