fontsize: 60% 70% 80% 90%

சமய நல்லிணக்கம் வலியுறுத்திய விழா

சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர்களின் ஆதரவில் ஆண்டுதோறும் நடைபெறும் மௌலீது ஷரீப் இவ்வாண்டு பென்கூலன் பள்ளிவாசலில் பிப்ரவரி 21ம் தேதி நடைபெற்றது.
பென்கூலன் பள்ளிவாசலின் நிர்வாகக்குழு தலைவர் எஸ்.எம்.அப்துல் ஜலீல் (படத்தில் இடமிருந்து மூன்றாவது) தலைமையில் நடைபெற்ற விழாவில், சுற்றுப்புறம் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் (படத்தில் இடமிருந்து நான்காவது).
இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவர் அலமி மூஸ„ ஜாமியா சிங்கப்பூரின் தலைவர் ஹாஜி அபுபக்கர் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சமய நல்லிணகத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மௌலானா மௌலவி காஞ்சி அப்துர் ரவூப் பாகவி அவர்களின் சிறப்பு பயான் நடைபெற்றது. நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை மற்றும் அறிவுரைகளிலிருந்து பல மேற்கோள்களுடன் உரை நிகழ்த்தப்பட்டது.
விழாவில் ஜாமியாவின் சார்பில் வசதி குறைந்த ஐந்து மாணவர்களுக்கு கணினிகள் அளிக்கப்பட்டன.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838