முகப்பு
சிங்கப்பூர்
உலகம்
மலேசியா
செய்திக்கொத்து
விளையாட்டு
கவிதை
தலையங்கம் (செவ்வாய் தோறும்)
வாசகர் கருத்து (செவ்வாய் தோறும்)
‘யூனிவர்ஸல் ஸ்டுடியோஸ்’ உல்லாசப் பூங்கா மார்ச் 18ம் தேதி சரியாக காலை மணி 8.28க்கு அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்று ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நேற்று அறிவித்தது.
மார்ச் பள்ளி விடுமுறையின் இறுதியில் உல்லாசப் பூங்கா திறக்கி விருக்கிறது என்றபோதும் சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் அவற்றைச் சரி செய்ய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் ரிசோர்ட்ஸ் வோர்ல்டு அறிக்கை தெரிவித்தது.
இந்த முன்னோடி காலம் வரை பொதுமக்களுக்கு உணவு மற்றும் கடைகளில் பயன்படுத்தக்கூடிய ரொக்கச் சீட்டுகளை வழங்கவுள்ளது.
மேல் விவரங்களை ரிசோர்ட்ஸ் வோர்ல்டு இனையப்பக்கத்தில் காணலாம்.