fontsize: 60% 70% 80% 90%

கட்டுப்படியாகக் கூடிய நிலையில் கல்விக் கட்டணம்

சிங்கப்பூரில் கல்விக் கட்டணம் கட்டுபடியாகக் கூடிய நிலையில் உள்ளது.
அண்மையில் வெளிநாட்டு மற்றும் சிங்கப்பூர் நிரந்தரவாசி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும் அவை இன்னமும் கட்டுப்படியாகக் கூடிய நிலையிலேயே இருப்பதாக கல்வி அமைச்சர் இங் எங் ஹென் நாடாளுமன்றத்தில் நேற்றுக் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஜோசப்பின் தியோ கல்விக் கட்டணங்களை உயர்த்துவதால் வெளிநாட்டு மாணவர்களை சிங்கப்பூர் வரவேற்கவில்லை என்ற எண்ணத்தை உருவாக்காதா என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு கல்வி அமைச்சர் இங் எங் ஹென் மேற்கண்டவாறு விளக்கம் அளித்தார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838