fontsize: 60% 70% 80% 90%

வேலையில்லாமல் இருந்த 36,000 மலேசியர்கள்

Bookmark and Share

மலேசியாவில் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கும் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் 36,000 மலேசியர்கள் வேலை இல்லாமல் இருந்ததாக அந்நாட்டு மனித வள துணை அமைச்சர் மஸ்னா மஸ்லான் கூறினார்.
அவர்களில் பெரும்பாலோர் தயாரிப்புத் துறையில் பணியாற்றிய ஊழியர்கள் என்றும் உலகப் பொருளியல் நெருக்கடியின்போது அவர்கள் வேலை இழந்ததாகவும் அமைச்சர் சொன்னார்.
வேலை இழந்த தொழிலாளர்களில் 29,000 பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதில் மனித வள அமைச்சு வெற்றி கண்டதாகவும் அவர் தெரிவித்தார். மற்றவர்களுக்கு மறுபயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838