fontsize: 60% 70% 80% 90%

மொழி பெயர்ப்பாளர்களை வேலைக்கு அமர்த்தும் மருத்துவமனை

சீனக் கிளை மொழி மட்டுமே பேசும் நோயாளிகள் கூறுவதை மருத்துவர்கள் புரிந்து கொண்டு சிகிச்சை அளிப்பதற்கு உதவ, தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தவிருக்கிறது.
அந்த வகையில் இப்போது தேசிய பல்கலைக் கழக மருத்துவமனையில் முதல் மொழி பெயர்ப்பாளராகத் திருவாட்டி சியூ முயி லியோங் பணியாற்றி வருகிறார்.
திருவாட்டி சியூ, ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளோடு, ஹாக்கியன் கெண்டன¬ஸ், ஹைய்னானிஸ், டியோச்சூ ஆகிய சீனக் கிளை மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்.
தேசிய பல்கலைக் கழக மருத்துவமனை இன்னும் இரண்டு மொழி பெயர்ப் பாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
இம்மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு நாள் ஒன்றுக்கு 300 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகிறது.
அதில் ஐவரில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஆங்கிலம், மாண்டரின் மொழிகளைப் பேசத் தெரியாதவர்கள் மொழி பெயர்ப் பாளர்களின் உதவியுடன் தங்களின் பிரச்சினையைத் தெளிவாக எடுத்துரைக்கலாம்.
“பெரும்பாலான முதிய சீன நோயாளி களுக்குக் கிளை மொழிகள் மட்டுமே தெரிந்திருப்பதால், மற்ற மொழிகளில் அவர்களுடன் உரையாடும்போது அவர்கள் அச்சத்துக்கு ஆளாகிறார்கள்,” என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் அவசரப் பிரிவு நடவடிக்கை களுக்கான துணை இயக்குநர் கிளாரா சின்.
ஆக, மொழி பெயர்ப்பாளர்களின் பங்கு இனி அதிகம் நாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838