fontsize: 60% 70% 80% 90%

கவனமாக செயல்படுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்து

Bookmark and Share

தைவானுக்கு மேலும் ஆயுதங்கள் விற்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படுமாறு அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து நவீன போர் விமானங்களை வாங்குதவற்கு இன்னும் ஆர்வம் கொண்டிருப்பதாக தைவான் தெரிவித்திருக்கும் வேளையில் சீனா இவ்வாறு எச்சரித்துள்ளது.
ஆயுத விற்பனை தொடர்பில் அமெரிக்காவுடனான ராணுவ பரிமாற்ற நடவடிக்கைகளை தற்காலிகாக நிறுத்தி வைக்கும் சீனாவின் முடிவில் மாற்றம் இல்லை என்று சீன தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
தைவானுக்கு 6.4 பில்லியன் யுஎஸ் டாலர்( S$ 9 பில்லியன்) மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று கூறி வரும் சீன அரசாங்கம், தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்றால் அமெரிக்க நிறுவனங்களுக்கு தடைகளை விதிக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
ஆயுத விற்பனை விவகாரமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா- சீனா உறவில் , திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சந்தித்ததால் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838