மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதற்கு தான் காரணமல்ல என்று மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் கூறியுள்ளார்.
அன்வர் மீதான ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் அவர், தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு திரு நஜிப்பும் அவர் மனைவியுமே முக்கிய காரணம் என்று அன்வர் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார். அன்வரின் கூற்றை ரோஸ்மா மறுத்துள்ளார்.
முன்னதாக ரோஸ்மா மன்சூர், தன் கணவர் எடுக்கும் தீர்மானத்தின் பின்னணியில் அவரை இயக்கும் மாயக் கரமாக தான் செயல்படுவதாகக் கூறப்படுவதை மறுத்ததாக பெர்னாமா தகவல் கூறியது.
நஜிப் அமைதியானவர் என்பதால் அவர் பொருட்டு அனைத்து முடிவுகளையும் தான் தீர்மானிப்பதாக ஆகிவிடாது என்றும் ரோஸ்மா கூறினார்.