fontsize: 60% 70% 80% 90%

வழக்கைத் தள்ளுபடி செய்யும் முயற்சியில் அன்வர் தோல்வி

Bookmark and Share

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் தற் பொழுது எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவருமான அன்வர் இப்ரகிம் தம்மீதான ஓரினப் புணர்ச்சி வழக்கைத் தள்ளுபடி செய்யும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளார்.
இதன் தொடர்பில் நேற்றுக் கூடிய மலேசியாவின் மேல் முறையீடு நீதிமன்ற நீதிபதிகள் தற்போதைய நிலையில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலத்தைக் கேட்காமல் தங்களுக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று கூறினர்.
இதற்கிடையே, கடந்த 2008ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், பிகேஆர் (PKR) கட்சியின் தரப்பில் போட்டியிட தவறான சிலரைத் தேர்ந்தெடுத்துவிட்டதாகக் கட்சியின் ஆலோசகர் டத்தோ { அன்வர் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டதாக பெர்னாமா செய்தி கூறுகிறது.
அடுத்தடுத்த பொதுத் தேர்தல்களில் வேட்பாளர் களைத் தேர்ந்தெடுக்கும்போது கட்சி கூடுதல் கவனத்துடன் செயல்படும் என்று எதிர்க் கட்சித் தலைவரான அன்வர் கூறினார்.
கொள்கை மாறாத, உறுதியான, நேர்மையான வேட்பாளர்களைக் கவனத் துடன் தேர்ந்தெடுக்கப் போவ தாக அவர் சொன்னார்.
“நாடாளுமன்றத் தொகுதி களுக்கான வேட்பாளர்களை நான் தேர்ந்தெடுத்தேன். அப்போது பிகேஆர் புதிய கட்சி. அவர்களை வேட்பாளர் களாக்க வேண்டியதாயிற்று” என்று பிகேஆர் கட்சியின் ஏற்பாட்டில் பினாங்கு மாநிலத் தில் நடைபெற்ற சீனப் புத்தாண்டு கொண்டாட்டத் தில் அவர் பேசினார்.
பாயான் பாரு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கின் முன்னாள் பிகேஆர் கட்சித் தலைவரு மான டத்தோ { சஹ்ரேன் முகம்மது ஹஷீம் சென்ற வாரம் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்.
பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்கின் தலைமைத்துவமும் எதிர்க்கட்சிகளின் உட்பூசலும் ஏமாற்றமளித்ததால் பதவி விலகுவதாக அவர் காரணம் கூறினார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838