பூனை ஒன்றை சுவர்மீது இருமுறை வீசிய ஆடவருக்கு நேற்று பத்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்கூலித் தொழிலாளரான 41 வயது சம்சம் இஸ்மாயில், ஜனவரி 1ந் தேதி புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 4, கட்டடம் 269ன் கீழ்த்தளத்தில் இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாக ஒப்புக் கொண்டார்.
கட்டடக் கீழ்த்தளத்தில் நடந்துசென்ற ஒரு மாது, சம்சம் பூனையைச் சுவர்மீது மோதி விட்டு வீசி எறிவதைப் பார்த்துப் போலிசாரை அழைத்தார்.
ஏற்கனவே அச்சுறுத்தல், திருட்டு ஆகிய குற்றங்களுக்குத் தண்டிக்கப்பட்டிருக்கும் சம்சம் ஐந்தாண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கலாம்.