fontsize: 60% 70% 80% 90%

நடுவர் மீது சங்ககாரா குறை

Bookmark and Share

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் இரு இன்னிங்ஸ் தோல்வி அடைந்த இலங்கை அணித் தலைவர் சங்ககாரா, நடுவர்களின் தீர்ப்பைக் குறை கூறினார்.
நடுவர் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யும் முறை இல்லாததால் தங்கள் அணி 500 ஓட்டங்களுக்கும் மேல் இழந்தது என்று அவர் வருந்தியுள்ளார்.
“நாங்கள் இந்தியாவால் முற்றிலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டுத் தோற்றோம் என்பதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் உலகில் மற்ற டெஸ்ட் போட்டிகளில் நடுவர் மேல்முறையீட்டு முறை உள்ள நிலையில் இந்தத் தொடரில் இல்லாதது பெரிய குறை,” என்றார் சங்ககாரா.
இந்திய அணித் தலைவர் டோனி, “நடுவர் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யும் முறை எப்போதுமே நூறு விழுக்காடு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொரு முறையிலும் சாதக மற்றும் பாதக அம்சங்கள் இருக்கும். பயனடைந் தால் நல்ல முறை என்பர். பாதிக்கப் பட்டால் பழித்துக் கூறுவர்,” என்றார்.
வருத்தம் இருந்தாலும் அதிரடி மன்னன் சேவாக்கையும், தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணியையும் பாராட்டினார் சங்ககாரா.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838