உலகின் பணக்கார விளையாட்டான கோல்ஃப் ஆட்டக்காரர் டைகர் உட்ஸ் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறார்.
உலகின் ‘நம்பர் 1’ கோல்ஃப் வீரரான அமெரிக்காவின் டைகர் உட்ஸ், அண்மையில் ஃபுளோரிடாவில் உள்ள அவரது வீட்டின் அருகே கார் விபத்தில் சிக்கினார்.
ஒரு கார் விபத்தில் சிக்கினாலும் சிக்கினார், டைகர் உட்ஸின் உள் விஷயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி அவரை வெளியில் தலைகாட்ட விடாமல் செய்து வருகின்றன.
நவம்பர் 27ம் தேதி புளோரிடாவில் உள்ள தமது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய உட்ஸ் விபத்தில் சிக்கினார். இதில் அவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.
உட்சின் மனைவி எலின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை காப்பாற்றியதாக முதலில் தகவல்கள் வெளியாயின.
ஆனால் காரில் அவரது ‘தோழி’ ரேச்சல் இருந்ததை அறிந்த மனைலி எலின், டைகர் உட்சிடம் தகராறு செய்துள்ளார்.
தகராறு அடிதடி வரை போனதாகவும் மனைவி எலின் தாக்கியதில் டைகர் உட்சுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
உட்ஸை, அவரது மனைவி கோல்ஃப் மட்டையால் துரத்திக் கொண்டு வந்ததாக நேரில் பார்த்த சிலர் தெரிவித்ததால் விவகாரம் சூடு பிடித்தது.
இந்த நிலையில் தமது அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் செவ்ரான் உலக சேலஞ் போட்டியில் டைகர் உட்ஸ் விளையாடவில்லை. போட்டியில் பங்கேற்றால் உட்சின் முகத்தில் உள்ள காயம் தெரிந்து விடும். அதனால் அவர் இந்தப் போட்டியைத் தவிர்க்கிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின.
நியூயார்க்கைச் சேர்ந்த கேளிக்கை நிகழ்ச்சிகள் அமைப்பாளர் ரேச்சல் உச்சிடலுக்கும் டைகர் உட்ஸŸக்கும் உள்ள தொடர்பு மனைவிக்குத் தெரிந்ததிலேயே இருதலைக் கொள்ளி எறும்பாகிப் போன உட்ஸின் தலையில் இப்போது இடிகள் சரமாரியாக விழத் துவங்கியுள்ளன.
தற்போது இன்னொரு பெண் தனக்கும், உட்ஸŸக்கும் இடையே 31 மாத கால உறவு இருப்பதாகப் போட்டு உடைத்துள்ளார்.
அவர் லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த கேளிக்கைக் சங்கம் ஒன்றில், மதுபானக் கூடப் பணிப்பெண் ëஜய்மி கிரப்ஸ்.
உட்ஸ் தமக்கு அனுப்பிய குரல் தகவலை (வாய்ஸ் மெய்ல்) அவர் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். அதில், “என் தொலைபேசியைத் துருவித் துருவி சோதனையிட்ட என் மனைவி, உன்னைத் தொலை பேசியில் அழைக்கக் கூடும். எனவே தயவு செய்து உனது பெயரைத் தொலைபேசிப் பட்டியலில் இருந்து எடுத்து விடேன். எனக்காக இந்த பேருபகாரத்தைச் செய், உடனே செய், பிறகு பேசுகிறேன், பை,” என்று கூறியுள்ளார் உட்ஸ்.
இவர் உட்ஸ் தமக்கு அனுப்பிய 300 குறுந்தகவல்களையும் ஆதாரங்களாக அடுக்கியுள்ளார். அவை, “குளியலறைக்குச் சென்று உன்னைச் சூடாகச் சில படங்கள் எடுத்து எனக்கு அனுப்பு,” என வெளியில் சொல்ல முடியாத அளவு அந்தரங்கமாக உள்ள நிலையிலும் அவற்றை அம்பலப் படுத்தி உட்ஸை அசிங்கப் படுத்தியுள்ளார் ëஜய்மி.
ëஜய்மியைத் தொடர்ந்து காளிகா மொக்வின் என்ற பெண்ணும் இதே ரீதியில் பேசியுள்ளார்.
இதனால் உட்ஸின் நிலை பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகி உள்ளது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக ஆர்லண்டோ போலிசார், டைகர் உட்சுக்கு கவனக் குறைவாக ஓட்டியதற்காக 7,500 ரூபாய் அபராதம் விதித்து, ஓட்டுநர் உரிமத்தில் 4 புள்ளிகள் வெட்டியுள்ளனர்.
இச்சூழலில் தமது இணைய தளத்தில், “நான் பாவம் செய்து விட்டேன், அதை மனப்பூர்வமாக உணர்கிறேன்,” என்று உருக்கமாக எழுதியுள்ளார் உட்ஸ்.
“சொந்த பாவங்களுக்குச் சந்தியில் விளக்கங்கள் கொடுக்கத் தேவையில்லை. என¬னும் நல்ல மன¬தனாகவும் கணவனாகவும் தந்தையாகவும் என்னை மேம்படுத்திக் கொள்ளப் பாடுபடுவேன்,” என்று உட்ஸ் பாவ மன்ன¬ப்புக் கேட்பது போல எழுதியுள்ளார்.
நவம்பர் 27ம் தேதி நடந்த விபத்துக்குப் பின் உட்ஸ் தமது வீட்டை விட்டு வெளியே வராமல் அடைந்து கிடக்கிறார். தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.