fontsize: 60% 70% 80% 90%

கனவு நனவானது: தமிழகத்தின் அஸ்வின்

Bookmark and Share

இலங்கைக்கு எதிரான இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
20 ஓவர் போட்டிக்கான அணியில் இருந்து ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு பதிலாக தமிழக ஆல் ரவுண்டர் ஆர். அஸ்வின், அசோக் திண்டா (பெங்கால்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
23 வயதான அஸ்வின் சென்னையைச் சேர்ந்தவர். 24 முதல் தர போட்டியில் விளையாடி 900 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாய் 107 ஓட்டம் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
தற்போது ரஞ்சி டிராபி போட்டியில் ஒரிசாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெற்றது குறித்துப் பேசினார்.
“இந்திய அணியில் இடம் பெறுவது எனது கனவாக இருந்தது. 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்றதன் மூலம் எனது கனவு நனவானது. ஹர்பஜன் சிங் சிறந்த சுழற்பந்து வீரர். இந்தியாவுக்காகப் பல போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அவருக்குரிய இடத்தில் நான் இடம் பெறுவேன் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது உண்மையிலேயே எனக்குப் பெருமை அளிக்கிறது. எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாதது,” என்றார்.
ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். கான்பூர் டெஸ்டில் சிறப்பாகப் பந்துவீசியதால் {சாந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மும்பையில் இலங்கையுட னான கடைசி டெஸ்டில் காம்பீருக்கு பதிலாகச் சேர்க்கப்பட்ட தமிழக வ~ரர் முரளி விஜயும் நேற்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். காம்பீர் இல்லாதது தங்களுக்குச் சாதகம் என்று பேசிய சங்ககாராவுக்குப் பெப்பே காட்டும் விதமாக சேவாக்குடன் துவக்க வ~ரராய்க் களமிறங்கிய முரளி பின்ன¬ப் பெடலெடுத்தார். பத்துக்கு மேற்பட்ட பவுண்டரிகளும் பல சிக்ஸர்களுமாகச் சரவெடி வெடித்த பின்புதான் வெளியேறினார்.
2 நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இலங்கை அணி 393 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. முதலாவது டெஸ்ட் சதத்தைப் போடும் ஆவலில் இருந்த இலங்கை வீரர் மாத்யூஸ், 99 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றத்தைச் சந்தித்தார். சேவாக் 209 பந்துகளில் 252 ஓட்டங்களை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். இதில் 35 பவுண்டரி களையும் 7 சிக்சர்களையும் விளாசியுள்ளார்.

Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838